செம்பாக்கம் கால பைரவர் கோவிலில் அஷ்ட பைரவர் வேள்வி
ADDED :2184 days ago
திருப்போரூர்: செம்பாக்கம், கால பைரவர் கோவிலில், அஷ்ட பைரவர் வேள்வி மற்றும் லட்சார்ச்சனை விழா, கோலாகலமாக துவங்கியது.
திருப்போரூர் அடுத்த, செம்பாக்கத்தில், கால பைரவர் கோவில் உள்ளது. இந்தாண்டு, 10ம் ஆண்டு பைரவர் விழா மற்றும் ஏகதின லட்சார்ச்சனை விழா, நேற்று காலை, 6:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, மூலவரான கால பைரவர், குரு பைரவர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மலர் மாலைகளுடன் வடைமாலைகள் சாத்தப்பட்டிருந்தன. யாகசாலை மற்றும் சுவாமி அலங்கார பணியை அர்ச்சகர் குழந்தைவேல் குழுவினர் செய்திருந்தனர். சிறப்பு விழாவிற்காக, யாகசாலை குண்ட கங்களில் வேள்விகள் நடத்தப்பட்டன. விழா நிறைவு நாளான, நாளை இரவு, 7:00 மணிக்கு, 1,008 செண்பகப் பூக்களால், மலர் அர்ச்சனை நடைபெறுகிறது.