பகவதி அம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவிற்கான குழுமை சாட்டுதல்
ADDED :40 minutes ago
ஆண்டிபட்டி; சக்கம்பட்டி பகவதி அம்மன், மருதகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாற்கான குழுமை சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து வழிபட்டனர். கோயில் விழா குழுவினர், பொதுமக்கள் கோயில் வளாகத்தில் ஒன்று கூடினர். இக்கோயில்களின் பொங்கல் விழா மார்ச் 31, ஏப்ரல் 1, 2 தேதிகளில் நடத்துவது என்றும், இதற்கான நிகழ்ச்சிகள், திட்டமிடுதல் ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொள்வது என்றும் குழுமை சாட்டுதல் நிகழ்ச்சியில் முடிவு செய்யப்பட்டது.