திருப்பரங்குன்றம் கோயிலில் வசந்த நவராத்திரி உற்ஸவம் நிறைவு
ADDED :193 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வராஹி அம்மன் ஆலயத்தில் வசந்த நவராத்திரி உற்ஸவ விழா இன்று நிறைவு பெற்றது. மார்ச் 19ல் துவங்கிய விழாவில் தினம் காலையில் லலிதா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜை, மாலையில் அலங்காரமாகி சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று யாகசாலை பூஜை முடிந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. அஷ்டவராகி அறக்கட்டளை குழுவினர் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.