உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலவலசை அய்யனார் கோயில் எருதுகட்டு விழா

மேலவலசை அய்யனார் கோயில் எருதுகட்டு விழா

கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மேலவலசையில் பழமை வாய்ந்த பொன்சிறை எடுத்த அய்யனார் கோயில் எருது கட்டு விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு மூலவர் பூர்ண புஷ்கலா சமேத பொன் சிறை எடுத்த அய்யனார், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்கார தீபாரதனைகள் நடந்தது. நேற்று கோயில் முன்புள்ள திடலில் எருதுகட்டு விழா நடந்தது. 100 அடி நீளம் கொண்ட வடக்கயிற்றினை காளையின் கழுத்தில் கட்டி, மற்றொருபுறத்தை ஏராளமான மாடுபிடி வீரர்கள் கையில் பிடித்துக் கொண்டு சென்றனர். குறிப்பிட்ட துாரத்தில் மாட்டின் திமிலை பிடித்து வீரர்கள் மாட்டை அடக்கினர். 45 காளைகள், மாடுபிடி வீரர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !