காரைக்குடியில் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
காரைக்குடி: காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கும்பாபிஷேக விழா கடந்த நவ.19 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 20 ம் தேதி கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை யாகசாலைக்கு பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் எடுத்து வந்தனர். காலை 9 45 மணிக்கு பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றிட கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வேச பள்ளி சேர்மன் செல்லப்பன் மங்கையர்க்கரசி தம்பதியினர் தலைமையேற்றனர். இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆதீனங்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் சத்தியன், இயக்குனர் சங்கீதா, கிட் அண்ட் கிம் கல்விக் குழுமங்களின் சேர்மன் அய்யப்பன், முன்னாள் எம்.எல்ஏ, துரைராஜ், மாங்குடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.