செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED :1 minutes ago
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று நடந்தது.
செங்கல்பட்டு அருகே உள்ள நத்தம் பகுதியில், புகழ்பெற்ற ஓசூரம்மன் கோவில் உள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், இரு ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தன. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கும்பாபிஷே கம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவெடுத்தனர்.அதன்படி, இன்று காலை சிறப்பு யாகத்துடன் ஓசூரம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.அதன்பின், ஓசூரம்மனுக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.