உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி கோவிலில் நாளை பரணி தீபம்

அவிநாசி கோவிலில் நாளை பரணி தீபம்

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை பரணி தீபமும், நாளை மறுநாள் மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.

கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோவிலில், கார்த்திகை மாத தீபத் திருவிழாவை முன்னிட்டு நாளை மாலை 6:30 மணிக்கு கோவில் ராஜகோபுரம், தீபஸ்தம்பம், அம்மன் சன்னதி கோபுரம், கொடிமரம் ஆகிய இடங்களில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. நாளை மறுநாள் இரவு 7:00 மணியளவில் கோவில் தீபஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !