உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து ஆத்யாத்மிக சேவா அறக்கட்டளை வரும் 28ல் திருக்குடைகள் சமர்ப்பண விழா

இந்து ஆத்யாத்மிக சேவா அறக்கட்டளை வரும் 28ல் திருக்குடைகள் சமர்ப்பண விழா

பெங்களூரு: இந்து ஆத்யாத்மிக சேவா அறக்கட்டளை சார்பில், முதன் முறையாக வரும் 28ம் தேதி திருச்சானுார் கார்த்திகை பிரம்மோத்சவத்துக்காக, திருக்குடை சமர்ப்பண விழா நடக்கிறது.

இதுகுறித்து அறக்கட்டளை செயலர் சீனிவாசமூர்த்தி கூறியதாவது:

நவராத்திரி பிரம்மோத்சவ விழாவின் போது, பெங்களூரு இந்து ஆத்யாத்மிகா சேவா அறக்கட்டளை சார்பில், கடந்த ஆறு ஆண்டுகளாக, திருக்குடை சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

முதன் முறையாக திருச்சானுார் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவிலில் நடக்கும் கார்த்திகை பிரம்மோத்சவத்துக்காக, அறக்கட்டளை சார்பில் இரண்டு திருக்குடைகள் சமர்பிக்கப்பட உள்ளது. வரும் 28ம் தேதி, மாலை 5:00 மணிக்கு அறக்கட்டளை செயலர் வீட்டில் இருந்து இரண்டு திருக்குடைகள் ஊர்வலம் புறப்படுகிறது.

6:00 மணிக்கு பனசங்கரி 2வது ஸ்டேஜில் உள்ள தேவகிரி வெங்கடேஸ்வரா கோவிலில், திருக்குடைகளுடன் விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், கர்நாடக இசை நிகழ்ச்சி நடக்கிறது.

அதன் பின், செயலர் வீட்டில் இருந்து டிச., 5ம் தேதி திருக்குடைகள் புறப்பட்டு 6ம் தேதி திருச்சானுாரை சென்றடைகிறது.

டிச., 7ம் தேதி பத்மாவதி கோவில் வலதுபுறம் உள்ள பெரிய ஜீயர் மடத்தில் வைத்து, இரண்டு திருக்குடைகளுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.

மேலும், அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்ட திருமால் – பத்மாவதி தாயார் விக்ரஹங்கள், ஸ்ரீவாரி பாதம், சங்கு சக்கரம், சடாரி ஆகியவைகளுக்கு, 16 வகையான அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலையில் ஊர்வலத்துடன் பத்மாவதி கோவில் நிர்வாகிகளிடம், திருக்குடைகள் ஒப்படைக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ரீவாரி பாதம், பத்மாவதி தாயார் திருக்குடைகளை, உங்கள் இல்லம் அல்லது ஊர்களில் வைத்து வழிபட, அறக்கட்டளை செயலர் சீனிவாசமூர்த்தியின் 80508 38605 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !