உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

குன்றத்து கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா ஆறாம் நாளான நேற்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சியில்

பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகினர்.

வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில்

சத்யகிரீஸ்வரர், பிரியாவிடை, பல்லக்கில் சீவலிநாயகர், திருஞானசம்பந்தர் புறப்பாடாகி 16கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர்.

அங்கு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை முடிந்து புராண கதையை பக்தர்களுக்கு கோயில் ஓதுவார் கூறினார்.

தீபாராதனைக்கு பின் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி ரதவீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !