உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூட்டாம்புளி அக்னி வீரபத்திர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கூட்டாம்புளி அக்னி வீரபத்திர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூட்டாம்புளி அக்னி வீரபத்திர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், விக்னேஸ்வரர் பூஜை நடந்தது.

தொடர்ந்து முதல் மற்றும் மூன்று கால யாக சாலை பூஜைகள் நடந்தன. பின்னர் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

மூலவருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. குலதெய்வ வழிபாட்டாளர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !