உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா திருவிளக்கு வழிபாடு கோலாகலம்

ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா திருவிளக்கு வழிபாடு கோலாகலம்

திருப்பூர்: பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 101-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருப்பூரில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீசத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் விழா நாளை (23-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள ஸ்ரீசாய் மந்திர் வளாகத்தில் நான்கு நாள் விழா கடந்த 20-ம் தேதி தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் மாலை சாய் பக்தர்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். நேற்று இரண்டாம் நாள் நிகழ்வாக, சத்ய சாய் சேவா சங்கத்தினர் மற்றும் பக்தர்கள் முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று சேவை செய்து, உதவிப் பொருட்களை வழங்கினர். இன்று காலை 8:00 மணிக்கு 101 நாம சங்கீர்த்தன பஜனையும், மதியம் 2:00 மணிக்கு நாராயண சேவைக்கான உணவு தயாரிப்பும் நடைபெறுகின்றன.

விழாவில், நாளை அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனத்துடன் பிறந்த நாள் விழா தொடங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், பிரசாந்தி கொடியேற்றம், ருத்ர பாராயணம் ஆகியவை நடைபெறுகின்றன. மாலை 5:00 மணிக்கு திருவீதியுலாவும், அதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சி, சிறப்புச் சொற்பொழிவு, ஊஞ்சல் உற்சவம், மங்கள ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !