உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரத்தில் துளசி அம்மன் திருக்கல்யாணம்

எமனேஸ்வரத்தில் துளசி அம்மன் திருக்கல்யாணம்

பரமக்குடி: பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதியில் துளசி அம்மனை குல தெய்வமாக வழிபடுமக்கள் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். கோயில்கள் மட்டுமல்லாமல் பலரும் வீடுகளில் துளசி செடியை வளர்த்து தரிசனம் செய்யும் வழக்கம் உள்ளது. மகாலட்சுமியின் அம்சமான துளசி செடி வீட்டில் இருக்கும் நிலையில் அனைத்து வகையான வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன்படி எமனேஸ்வரத்தில் குல தெய்வமாக வீட்டில் வளர்த்து பூஜிக்கப்படும் துளசி தேவிக்கும், விஷ்ணுவிற்கும் திருக்கல்யாணம் நடத்தி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !