உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்மலை வெள்ளி மலையாண்டி கோவிலின் 100 ஆண்டுகள் கடந்து நிற்கும் தீப திருவிழா

அழகர்மலை வெள்ளி மலையாண்டி கோவிலின் 100 ஆண்டுகள் கடந்து நிற்கும் தீப திருவிழா

அழகர்கோவில்: மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயில் மலை மீதுள்ள வெள்ளி மலையாண்டி கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு தீபம் ஏற்ற பட உள்ளது.


கள்ளழகர் கோயிலில் இருந்து மலைமேல் சுமார் 3250 அடி உயரத்தில் கோம்பைகாடு பகுதியில் உச்சி வெள்ளி மலையாண்டி கோயில் உள்ளது. இங்கு தீபம் ஏற்றி வரும் சதீஷ் என்பவர் இது குறித்து கூறியதாவது: கள்ளழகர் கோயிலில் கடந்த 20 ஆண்டுகளாக 11 நாட்கள் விரதம் இருந்து வெள்ளி மலையாண்டி கோயிலில் கார்த்திகை பௌர்ணமி அன்று தீபம் ஏற்றி வருகிறேன். இதற்கு முன்பும் இங்கு ஊழியர்களே இதற்கான பூஜையை செய்து வந்தனர். வருடம் முழுவதும் இந்த மலைக் கோயிலுக்கு யாரும் வருவதில்லை கார்த்திகை மாதம் மட்டுமே இங்கு தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அழகர் கோவில் மலையை சுற்றி உள்ள கிராமத்தினர் கார்த்திகை பௌர்ணமி திருவிழாவை கொண்டாடும் வகையில் இங்கு தீபம் ஏற்றப்பட்டவுடன் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவர். இது இன்றும் நடைமுறையில் உள்ளது. தீபம் ஏற்றுவதற்கு முன்பு மலையில் செல்லும் வழியை கோயில் பணியாளர்கள் சுத்தம் செய்வார்கள். வரும் நவம்பர் 24ஆம் தேதி பௌர்ணமி அன்று காலை 10:00 மணிக்கு 350 லிட்டர் நெய், 60கிலோ திரி, பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு மலை மீது ஏறுவோம். மதியம் 2 மணி அளவில் மலைக்கு சென்று கொப்பரையை தயார் செய்து பூஜைகள் முடிந்தவுடன் மாலை 6:15 மணிக்கு தீபம் ஏற்றப்படும். இதில் கலந்துகொள்ள அழகர் மலையை சுற்றி உள்ளவர்களும் பல்வேறு பகுதிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !