உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரிய தேரோட்டம் கோலாகலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரிய தேரோட்டம் கோலாகலம்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா 7ம் நாளான இன்று, அண்ணாமலையார் பெரிய தேரோட்டம் நடந்தது.  விநாயகர், முருகன், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேர்கள், மாட வீதிகளில் வரிசையாக வலம் வந்தன.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  அப்போது, அரோகரா... அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.  டிச.,24ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு  2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !