நத்தம் செல்வ விநாயகர் கோவிவில் வருடாபிஷேக விழா
ADDED :11 minutes ago
நத்தம்: நத்தம் - வேலம்பட்டி அண்ணா நகர் செல்வ விநாயகர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.