உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குஜராத்தில் உலக நன்மைக்காக மகா யாகம்: காஞ்சி சங்கராச்சாரியார் சிறப்பு வழிபாடு!

குஜராத்தில் உலக நன்மைக்காக மகா யாகம்: காஞ்சி சங்கராச்சாரியார் சிறப்பு வழிபாடு!

குஜராத் மாநிலம், வத்நகர் நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஹாடகேஸ்வர மகாதேவர் கோயில் வளாகத்தில், உலக மக்கள் அனைவரின் நலன் வேண்டி உலக அமைதி மகா யாகம் நடைபெற்றது.


காஞ்சி காமகோடி பீடதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மகா யாகத்தில், குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி கலந்து கொண்டார். வேத மந்திரங்கள் முழங்க, பல்வேறு திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு யாகம் நடைபெற்றது. 


இதுகுறித்து குஜராத் துணை முதல்வர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது: ஆன்மிக அதிர்வுகள் நிறைந்த இந்த நிகழ்வில் பங்கேற்றது மனதுக்கு ஆழ்ந்த அமைதியையும் ஆன்மிக நிறைவையும் அளித்ததாகவும்,  மேலும், அனைவரும் மகிழ்ச்சியாக வாழட்டும்; அனைவரும் நோயின்றி வாழட்டும் என்ற பிரார்த்தனையுடன், உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நலமாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக நன்மை, அமைதி மற்றும் அனைத்து உயிர்களின் நல்வாழ்வை வேண்டி நடைபெற்ற இந்த மகா யாகம் பக்தர்களிடையே ஆன்மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !