உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவான் சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: சேவாதள மாநாட்டில் இந்திய –ஆப்பிரிக்க இசை சங்கமம்

பகவான் சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: சேவாதள மாநாட்டில் இந்திய –ஆப்பிரிக்க இசை சங்கமம்

புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100-வது அவதார நூற்றாண்டு விழாவின் நிறைவையொட்டி, 10-வது அகில இந்திய ஸ்ரீ சத்ய சாய் சேவாதள மாநாடு நேற்று ஆந்திர மாநிலம் பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாள் விழா சுயநலமற்ற சேவை மற்றும் மனமாற்றத்தின் முக்கியத்துவம் குறித்த பகவானின் ஒலிப்பேருரையுடன் தொடங்கியது.


மாநாட்டில் தமிழ்நாடு தெற்கு மாநில ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் எஸ். கணபதி, தயை, அன்பு, நீதி ஆகிய நற்பண்புகளின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். இறைவன் மீதான அன்பு, தன்னடக்கம், பிரார்த்தனை ஆகியவை அறவாழ்வுக்கு அடிப்படை எனக் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவைக் குறிப்பிட்டு, S.A.I. – உயரிய அறிவு என்ற கருத்தையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, இந்தியா முழுவதும் சத்ய சாய் சேவா அமைப்புகள் மேற்கொண்ட சேவைகளை விளக்கும் சேவா தொகுப்பு மற்றும் பகவானின் உரைகள் அடங்கிய Being and Becoming ஆகிய இரண்டு நூல்கள் அவரது திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவாக, பிரபஞ்சத்தின் தாளம் என்ற ஆப்பிரிக்க - இந்திய தாள இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபல மிருதங்கக் கலைஞர் பத்ரி சதீஷ் குமார் தலைமையில் ஏழு கலைஞர்கள் ஜெம்பே, பகவாஜ், நகாரா, செண்டை, இடைக்கை உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர். பல்வேறு நாடுகளின் இசை மரபுகள் சங்கமித்த இந்நிகழ்ச்சி, ஒற்றுமை, தூய்மை, தெய்வீகம் ஆகிய பகவான் வலியுறுத்திய கருத்துகளை இசை மூலம் எடுத்துரைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !