உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத்திற்கு தயாராகும் பழைய தாமிர குப்பரை

திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத்திற்கு தயாராகும் பழைய தாமிர குப்பரை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலையில் நவ. 24ல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற பழைய தாமிர கொப்பரை தயாராகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயில் சார்பில் ஆண்டுதோறும் மலை மேல் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின்மேல் 4 அடி உயரம், மேல்பகுதி இரண்டரை அடி அகலத்திலும், அடிப்பகுதி ஒன்னேமுத்கால் அடி அகலத்திலும், 70 கிலோ எடையில் தாமிர கொப்பரை வைத்து, அதில் 400 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணியில் திரி தயாரித்து, 5 கிலோ சூடம் மூலம் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் பட வேண்டும் என பல ஆண்டுகளாக ஹிந்து அமைப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், இந்த ஆண்டு நவ. 24 ஒரு நாள் மட்டும் தீப தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் தாமிர கொப்பரை தற்போது சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. தீப தூணில் இந்த கொப்பரை மூலம் தீபம் ஏற்றப்படுகிறதா அல்லது வேறு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதா என அதிகாரிகள், நிபுணர்கள் ஆலோசனைக்குப் பின்பே முடிவு செய்யப்படும்.‌ இந் நிலையில் பழைய கொப்பரை தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !