பெருமாள் கோவில்களில் வளர்பிறை ஏகாதசி விழா: சிறப்பு வழிபாடு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் வளர்பிறை ஏகாதசி விழா இன்று நடந்தது.
பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசியையொட்டி நேற்று காலை, 10:30 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு திவ்ய திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் அருள்பாலித்தார். தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், தாயாருக்கும், பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது.
* ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஒன்பது வகையான அபிஷேகம் நடந்தது. அதன்பின், ஆபரண அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.