தேவிபட்டினம் பூமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :22 minutes ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே, அத்தியூத்து கோவில் கரை, பூமாரி அம்மன் கோயில், கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றது. பின்னர், முதல் மற்றும் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர், யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு புனித நீர் மூலம் அபிஷேகம் நடைபெற்று, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை அத்தியூத்து கோவில் கரை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.