அச்சம்பாளையம் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :14 minutes ago
அன்னூர்: அச்சம்பாளையம், செல்வ விநாயகர் கோயிலில், பல லட்சம் ரூபாய் செலவில், செல்வ விநாயகர், கன்னிமூல கணபதி, கல்யாண சுப்பிரமணியர், தன்னாசியப்பர், விஜய நாராயண பெருமாள், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், நவகிரகங்கள், கால பைரவர் சன்னதிகள் மற்றும் விமான கோபுரத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டன. கடந்த 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 18ம் தேதி தீர்த்த குடம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. 19ம் தேதி வேள்வி பூஜை, விமான கோபுர கலசம் நிறுவுதல் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு, செல்வ விநாயகர் மற்றும் பரிவார விமான கோபுர கலசங்களுக்கும், இதையடுத்து, மூலவர், செல்வ விநாயகர், பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.