உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் கோவிலில் ஆறாட்டு மகோற்சவம்

பகவதி அம்மன் கோவிலில் ஆறாட்டு மகோற்சவம்

பாலக்காடு: பாலக்காடு, பிராயிரி கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவிலில், நடப்பாண்டு கார்த்திகை மாதம், ஆறாட்டு மகோற்சவத்தை முன்னிட்டு, நாளை நிகழ்ச்சி துவங்கி, டிச. 1ம் தேதி வரை நடக்கிறது.

நாளை முதல் 29ம் தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோவில் வளாக கலையரங்கில் நடக்கின்றன. 24ம் தேதி மாலை தந்திரி பிரஹ்மஸ்ரீ அணிமங்கலம் வாசுதேவன் நம்பூதிரியின் தலைமையில் கொடியேற்றம் நடக்கிறது. வரும் 29ம் தேதி அம்மனுக்கு விளக்கு பூஜை நடக்கிறது. டிச. 1ம் தேதி மகா கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை, கலச பூஜை, அஷ்டபதி, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு (ஆறாட்டு), பிரஹ்ம கலசாபிஷேகம், ஐந்து யானைகளின் அணிவகுப்புடன் காழ்ச்ச சீவேலி, அன்னதானம், அம்மன் எழுந்தருளும் வைபவம், நிர்மால்லிய தரிசனம், சந்தன காப்பு, சுற்றுவிளக்கு ஏற்றுதல், தீபாராதனை ஆகியவை நடக்கின்றன.

விழா ஏற்பாடுகளை, கோவில் உற்சவ கமிட்டி துணை தலைவர் மதுசூதனன், பொதுச்செயலாளர் சந்தீப், செயலாளர் பவின், கோவில் பக்த சமாஜம் செயலாளர் கிருஷ்ண பிரசாத் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !