காஞ்சி வரதர் கோவிலில் வரும் 24ல் சொக்கப்பனை தீபம்
ADDED :25 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி வரும் 24ம் தேதி, மாலை 6:00 மணிக்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட உள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி வரும் 23ம் தேதி பரணி தீபம் நடைபெறுகிறது. விஷ்ணு கார்த்திகையான 24ம் தேதி மாலை 6:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து, பெருமாள் உபயநாச்சியாருடன், கோவில் கொடி மரம் முன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
தொடர்ந்து பல்வேறு பூஜைகளுக்குப்பின், சுவாமி முன், 20 அடி உயரத்திற்கு பனை மரத்தில், ஓலைகள் சுற்றி கட்டப்பட்டு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட உள்ளது. தொடர்ந்து, பெருமாள் மாட வீதி புறப்பாடு நடைபெறுகிறது.