உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்

சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம்

புதுச்சேரி: சாரம் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவத்தில், நேற்று மஞ்சள் நீராட்டு உற்சவம் நடந்தது.


புதுச்சேரி, சாரம் முத்துவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா கடந்த 9ம் தேதி துவங்கி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது. நேற்று 10ம் நாள் விழாவில், மஞ்சள் நீர் உற்சவம், சுவாமி வீதியுலா நடந்தது. இன்று இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !