கார்த்திகை தீபத்தன்று பர்வத மலையில் ஏற 1200 பேருக்கு அனுமதி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பர்வதமலை கோவிலில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு
பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் வந்தனா கார்க் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
வரும், 24ம் தேதி தீப திருவிழாவன்று, அதிகாலை, 5:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை பர்வதமை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 18 வயது முதல், 60
வயது உள்ளவர்கள் பர்வதமலை ஏற அனுமதிக்கப்படுவர்.
கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், பர்வத மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள், இதய
நோயாளிகள், உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பர்வதமலை ஏற முயற்சிக்க வேண்டாம்.
பர்வதமலை ஏற, 900 வெளியூர் பக்தர்கள் மற்றும், 300 உள்ளூர் பக்தர்கள் என, 1,200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஒரு மணி நேரத்திற்கு, 150 பக்தர்கள்
அனுமதிக்கப்படுவர். http://parvathamalai.hrce.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.