உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் மாடுகள் திரிவதால் பக்தர்கள் பீதி

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் மாடுகள் திரிவதால் பக்தர்கள் பீதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் திரியும் மாடுகளால் பக்தர்கள் பீதி அடைகின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில்

நீராடுகின்றனர். இதில் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராட செல்லும் பக்தர்களிடம், அங்குள்ள கீரை விற்கும் வியாபாரிகள் சிலர், மாடுகளுக்கு அகத்தி கீரை தானம்

கொடுங்கள் என கூறி விற்கின்றனர்.

இதனை பக்தர்கள் வாங்கி அங்குள்ள மாடுகளுக்கு கொடுக்கும் போது, கூட்டத்திற்குள் உள்ள பிற மாடுகள் கீரை உண்ணும் ஆவலில் அசுர வேகத்தில் ஓடி வருகின்றன.

அப்போது பக்தர்களை முட்டி கீழே தள்ளி காயப்படுத்துகின்றன. இதனால் மாடுகளை கண்டு பக்தர்கள் அச்சமடைகின்றனர். மாடுகளை அப்புறப்படுத்த பலமுறை பக்தர்கள்

வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.

எனவே மாடுகளை அகற்றி அக்னி தீர்த்த கடற்கரையில் சுகாதாரம், பக்தர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !