சாய்பாபா 101வது பிறந்த நாள்: நாம சங்கீர்த்தனம் சமர்ப்பணம்
ADDED :10 minutes ago
நல்லுார் ஸ்ரீசத்ய சாய் பஜனா மண்டலி சார்பில், சாய்பாபாவின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று 101 நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. இதில் 50 பக்தர்கள் பங்கேற்று நாம சங்கீர்த்தனம் சமர்ப்பித்தனர்.
இன்று காலை ஓம்காரம், சுப்ரபாதம், வேதபாராயணத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. காலை 9:00 மணிக்கு பல்லக்கு சேவை, 10:00 மணிக்கு சத்ய சாய் சகஸ்ர நாம பஜனை, மதியம் 12:00 மணிக்கு நாராயண சேவை, வஸ்திரதானம் நடைபெற உள்ளன.
பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர், பி.என். ரோடு, ஸ்ரீசத்ய சாய்பாபா சமிதியில், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீசத்ய சாய் பாபா; நல்லுார், ஸ்ரீசத்ய சாய் மண்டலியில், நேற்று 101 நாம சங்கீர்த்தனம் நடந்தது.ராம்நகர் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி சார்பில், நாராணய சேவைக்கான தயாரிப்புப்பணி நடந்தது.