உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி விழா: சுசீந்திரத்தில் இருந்து பத்மநாதபுரம் சென்ற முன்னுதித்த நங்கை அம்மன்!

நவராத்திரி விழா: சுசீந்திரத்தில் இருந்து பத்மநாதபுரம் சென்ற முன்னுதித்த நங்கை அம்மன்!

சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் கேரளா காவல்துறை பாதுகாப்புடன் இன்று காலை பத்மநாபபுரம் நோக்கிப் புறப்பட்டார்.


திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் இன்று புறப்பட்டார். வழிநெடுக மக்கள் மலர் துாவி வழிபாடு செய்தனர். முன்னதாக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் இன்று காலை 9.30 மணிக்கு பல்லக்கில் எழுந்தருளினார். அம்மனுக்கு தமிழக மற்றும் கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்தனர். கேரள போலீஸ் வாத்திய இசை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து சுவாமி ஊர்வலம் புறப்பட்டது. வழிநெடுக சுவாமியை மலர்கள் துாவி மக்கள் வரவேற்றனர். நாளை (அக்.9) பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சரஸ்வதி தேவி, குமாரகோவில் முருகப்பெருமான், முன்னுதித்த நங்கை அம்மன் ஆகியோரின் நவராத்திரி பவனி திருவனந்தபுரம் நோக்கிப் புறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !