உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பெருமாளுக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பவள மாலை காணிக்கை அளித்த பக்தர்

திருப்பதி பெருமாளுக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பவள மாலை காணிக்கை அளித்த பக்தர்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் திருமலைக்கு வருவது வழக்கம். தற்போது புரட்டாசியில் ஏழுமலையான் தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் திருமலையில் குவிந்து வருகிறது. வரும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு தங்களால் முடிந்த காணிக்கை செலுத்தி வழிபடுவர். அவ்வாறு ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தரான கமலா, சுமார் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள இரண்டு தங்க-பவள மாலைகளை இன்று வியாழக்கிழமையன்று திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிக்கு நன்கொடையாக வழங்கினார். ஸ்ரீவாரி கோயிலில் உள்ள ரங்கநாயகல மண்டபத்தில், நன்கொடையாளர் தனது குடும்பத்தினருடன் இணைந்து, திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சௌத்ரியிடம் அந்த மாலைகளை ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !