விருந்தீஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED :12 minutes ago
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே வடமதுரை விருந்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழா நடந்தது. பெரிய நந்தி, சிவபெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நந்திக்கு நெய், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீறு, நாணயங்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. விஸ்வநாயகி அம்பிகை உடனமர் விருத்தீஸ்வரர் சுவாமி திருவிதி உலா நடந்தது. விழாவில், சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவ வாத்தியம் இசைக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விருந்தீஸ்வரர் திருக்கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் மணி தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.