உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா

திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று நடைபெற்றது. 


கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்படும். சிறப்பு மற்றும் பொது பூஜை முடிந்து கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டு, வேல் பல்லக்கில் ரத வீதிகளில் உலா சென்று மலைமேல் கொண்டு செல்லப்படும். அங்கு சுப்ரமணியர் கரத்தில் வேல் சேர்ப்பிக்கப்படும். உச்சி கால நேரத்தில் கோயில் சிவாச்சார்யார்களால் வேல், சுனை தீர்த்தத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகங்கள் நடக்கும்.  குன்றத்து மலை மேல் வேல் எடுக்கும் விழாவில் நீதிமன்ற உத்தரவிற்கு பின்பு வேல் கொண்டு செல்லப்பட்டது. மாலை 5:30 மணிக்கு பல்லக்கில் வேல் புறப்பாடாகி பெரியராத வீதி பழனி ஆண்டவர் கோயில் வழியாக மலை மேல் கொண்டு செல்லப்பட்டது. வழக்கமாக காலையில் ரத வீதிகளில் வேல் புறப்பாடாகும். இன்று மாலையில் வேல் புறப்பட்டதால் நேராக மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.


பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பு: மலை மேல் வேல் எடுக்கும் திருவிழாவில் மலைமேல் வேல் கொண்டு செல்லும் காட்சியும், சுனை தீர்த்தத்தில் சிவாச்சாரியார்களால் வேலுக்கு அபிஷேகம் செய்யப்படும் காட்சிகளையும் வெளியிடுவதற்காக பத்திரிகையாளர்கள் மலை மேல் செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் மலை மேல் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !