திருப்பரங்குன்றத்தில் மீண்டும் விளக்கு பூஜை: நவ., 29ல் நடைபெறுகிறது
ADDED :2173 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ., 29ல் மீண்டும் 108 விளக்கு பூஜை நடக்கிறது.
கோயிலில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை நடந்த இப்பூஜை சில மாதங்களுக்கு முன் எவ்வித காரணமும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டது. பக்தர்கள் எதிர்ப்பால் மீண்டும் நடத்த முடிவானது. நவ.,29 மாலை 6:00 மணிக்கு நடக்கும் இப்பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பூஜை பொருட்கள், பிரசாதம் வழங்கப்படும். கட்டணம் கிடையாது. விரும்புவோர் மாலை 5:00 மணிக்கு கோயில் கம்பத்தடி மண்டபத்திற்கு வரலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.