உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளகோவிலில் காலபைரவருக்கு சிறப்பு யாக வழிபாடு

வெள்ளகோவிலில் காலபைரவருக்கு சிறப்பு யாக வழிபாடு

வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர்க்கு சங்காபிஷேக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. முன்னதாக திருமஞ்சனம், பால், தயிர், தேன், பன்னீர், திருநீறு, சந்தனம், உட்பட 32 திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வெள்ளகோவில் தெய்வ நாயகி உடனமர் சோளீஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள காலபைரவர்க்கு யாகபூஜைகள் மற்றும் கலசம் வைத்தும், 108 சங்கில் தீர்த்தம் செலுத்தி சங்காபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை காலபைரவர் தேய்பிறை அஷ்டமி விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !