ஐயப்பன் அவதரித்தது ஏன்?
ADDED :2506 days ago
ஹரியாகிய மகாவிஷ்ணுவுக்கும் ஹரனாகிய சிவபெருமானுக்கும் மகனாக அவதரித்தவர் ஹரிஹர புத்திரன்.
மனித வடிவில் பந்தள மன்னரின் வளர்ப்பு மகனாக மணிகண்டன் வளர்ந்தார். புலிப்பாலுக்காக காட்டுக்கு சென்ற அவர், மஹிஷியை வதம் செய்தார். தன் அவதார நோக்கம் நிறைவேறிய பின் சபரிமலையில் கோயில் கொண்டார். இதுவே ஐயப்பன் வரலாறு. ஆனால் பூதநாதோபாக்கியானம் நூலில், பந்தள மன்னருக்குப் பதிலாக பாண்டிய மன்னரின் சேவகனாக ஐயப்பன் இருந்ததாகவும், அவரை புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.