மாமல்லபுரத்தில் கோவில் அர்ச்சகர் தோற்றம் ஜப்பான் பயணியர் வியப்பு
ADDED :2263 days ago
மாமல்லபுரம் : மாமல்லபுரம் சுற்றுலா வந்த ஜப்பானிய பயணியர், கோவில் அர்ச்சகர் தோற் றத்தை பார்த்து, அவருடன் புகைப்படம் எடுத்தனர்.மாமல்லபுரம் சிற்பங்களைக் காண சுற்றுலா வந்துள்ள ஜப்பான் பயணியர், வெண்ணெய் உருண்டை பாறை பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு சென்ற, கோவில் அர்ச்சகர் முரளியின் தோற்றத்தை பார்த்தனர்.அவரிடம், எதற்காக இத்தோற்றம், அதன் பாரம்பரிய பின்னணி குறித்து, விளக்கம் கேட்டனர். அர்ச்சகர் தோற்றத்தை அவர் விளக்கிய பின், அவருடன் ஜப்பானியர் புகைப்படம் எடுத்தனர்.