உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி அமாவாசை; பிரத்தியங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம்

பங்குனி அமாவாசை; பிரத்தியங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம்

நடுவீரப்பட்டு: பிரத்தியங்கராதேவிக்கு நடந்த நிகும்பலா யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


நடுவீரப்பட்டு பாதாள காளி கோவிலில் உள்ள பிரத்தியங்கரா தேவிக்கு இன்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது. பூஜையை முன்னிட்டு இன்று மதியம், 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் யாக வேள்விகள் ஆரம்பிக்கப்பட்டன. மதியம், 2:30 மணிக்கு யாக வேள்வியில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து பிரத்தியங்கரா தேவி அம்மனுக்கு கலச அபிஷேகம் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு பாதாள காளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !