மாசானியம்மன் கோவிலில் அம்மனுக்கு காய்கறி அலங்காரம்
ADDED :3 hours ago
குன்னுார்: குன்னுார் மாசானியம்மன் கோவிலில் இன்று அமாவாசையையொட்டி காய்கறிகளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. குன்னுார் ரேலிகாம் பவுண்ட் பகுதியில் உள்ள மாசானியம்மன் கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காய்கறி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி முன்னதாக சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.