உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடல் மாலை....ஜாக்கிரதை!

குடல் மாலை....ஜாக்கிரதை!

சிலர் பசுத்தோல் போர்த்திய புலியைப் போல இருப்பார்கள். அதாவது  மற்றவருக்கு ""நல்லவனாக இரு. நாலுபேருக்காவது நன்மை செய். பிறர்  பொருளுக்கு ஆசைப்படாதே” என்றெல்லாம் சொல்வார்கள். அரசியலில்  பெரும்பாலும் நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என மேடைகளில்  முழங்குவர். ஆனால் வரிப்பணத்தை சுயநலத்துடன் சூறையாடுவர். ""ஒரு மனிதன் இறுதித்தீர்ப்பு நாளில் நரகத்தீயில் தூக்கியெறியப்படுவான்.  அவனது குடல் வெளிப்பட்டு தீயில் விழும். அக்குடலை மாலை போல சுற்றிக்  கொண்டு நரகத்தைச் சுற்றுவான். ""உனக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது?” என  அங்கிருப்பவர்கள் கேட்கும் போது, ""நான் உங்களுக்கு நன்மை செய்ய  போதித்தேன். ஆனால் அதை யாருக்கும் தெரியாமல் தீயசெயல்களில் ஈடுபட்டேன்” என பதில்  சொல்வான். ஊருக்குத் தான் உபதேசம் என நியாயம், தர்மத்தை அலட்சியப்படுத்தினால்  குடல், மாலையாக அவரவர் கழுத்தில் விழும் ஜாக்கிரதை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !