உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முன்னேறு மேலே! மேலே!

முன்னேறு மேலே! மேலே!

* எவ்வளவு தடைகள் குறுக்கிட்டாலும் லட்சியத்தை விட்டு விலகாதே.  அக்கறையுடன் முன்னேறு.
* நல்லவனாக இருந்தால் மட்டும் போதும்! வேறு எதுவும் செய்யத்  தேவையில்லை. எல்லாம் நல்லதாக அமையும்.
* பூக்கள் ஒவ்வொன்றும், கடவுளின் பெருமையை புகழ்ந்தபடி காற்றில்  அசைந்தாடுகின்றன.
* கடவுள் உணர்வு ஒன்றே மேலான உதவி. அவர் மீது அன்பு செலுத்துவதே  மகிழ்ச்சி.
* பணியில் தயக்கமோ, பயமோ  வேண்டாம். ஆர்வமுடன் செயலாற்று.
* எப்போதும் அமைதியாக இருக்க கற்றுக் கொள். பேசாமல் இருப்பதன் மூலம்  வேண்டாத பிரச்னை உன்னை நெருங்காது.
* தினமும் காலையில் உடற்பயிற்சியில் ஈடுபடு.
* எந்தப் பணியில் ஈடுபட்டாலும் கடவுளுக்குரிய காணிக்கையாக கருதுங்கள்.
* வேலையும் ஒரு வழிபாடு தான். கடவுள் விரும்பும் பிரார்த்தனை இதுவே.
* காலத்தை வீணாக்குவது கூடாது. உடனடியாக நல்ல பணிகளில் ஈடுபடு.
* சாப்பிட அமர்ந்ததும் சத்தான உணவு மூலம் வலிமை கிடைக்க பிரார்த்தனை  செய். -உற்சாகமூட்டுகிறார்  ஸ்ரீ அன்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !