உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்தியாத்தோப்பு கைலாசநாதர் கோவில் கட்ட பூமி பூஜை

சேத்தியாத்தோப்பு கைலாசநாதர் கோவில் கட்ட பூமி பூஜை

சேத்தியாத்தோப்பு:சக்திவிளாகம் கிராமத்தில், பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடந்த கைலாச நாதர் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது.

சேத்தியாத்தோப்பு சக்திவிளாகம் கிராமத்தில் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. பாழடைந்துள்ள கைலாசநாதர் கோவில் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.

இதற்கான பூமி பூஜை விழா நடந்தது. இதில் கிராம மக்கள் மற்றும் சென்னையை சேர்ந்த சிவ பிரியா உள்ளிட்டடோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !