/
கோயில்கள் செய்திகள் / உத்தரவு வாங்க ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்த கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி
உத்தரவு வாங்க ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்த கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி
ADDED :22 minutes ago
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார சுவாமி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில உள்ள திரிபுரசுந்தரி ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். தை பிரம்மோற்சவத்தின் போது, கந்தசுவாமி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருள்வது வழக்கம். அதன்படி இன்று பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.