ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் திருமுக்குளம் விரைவில் சீரமைப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்குரிய திருமுக்குளம் சீரமைப்பதற் குரிய பணிகளுக்கு அனுமதி பெறுவதற்கான விசாரணை, நவ.28 ல் நடப்பதால், விரைவில் பணிகள் துவங்கவுள்ளது.
இக்குளத்தின் வடக்கு பக்க கற்சுவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெயர்ந்து விழுந் தது. இதனையடுத்து குளத்தின் மற்ற பகுதிகளிலும் கற்சுவர்கள் சிதையத் துவங்கியது.
இதனையடுத்துகுளத்தை சீரமைக்கும் பணியில் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், மிகவும் பழமை வாய்ந்த கோயில்கள், குளங்களை சீரமைக்க வேண்டுமெனில் தொல்லியல் துறையின் ஆய்வு அறிக்கை சமர்ப்பித்து, அதனடிப்படையில் மாவட்ட மற்றும் மண்டல குழுக்களின் ஆய்வு நடத்தப்பட்டு, தற்போது சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுத லின்படி செயல்படும் பாரம்பரிய கமிட்டியின் அனுமதி பெறப்பட்டு, அதன் பின்னரே சீரமைப்பு பணிகள் துவங்கப்பட வேண்டும் என்பது அரசின் வழிகாட்டுதல் விதியாகும்.
இதில் வரும் நவ.28 அன்று சென்னையில் பாரம்பரிய கமிட்டியின் விசாரணை நடக்கிறது. இதனையடுத்து உரிய அனுமதி பெறப்பட்டு, விரைவில் திருமுக்குளம் சீரமைப்பு பணிகள் துவங்கவுள்ளது. இதுகுறித்து செயல் அலுவலர் இளங்கோவன் கூறியதாவது: திருமுக்குள த்தை சீரமைக்க, பல நன்கொடையாளர்கள் தயாராகவுள்ளனர். விரைவில் பாரம்பரிய கமிட்டி அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனையடுத்து திருமுக்குளம் சீரமைப்பு பணிகள் துவங்கும்,என்றார்.