உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அகோரிகள் வழிபாடு

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அகோரிகள் வழிபாடு

அவிநாசி:காசியில் உள்ள அகோரிகள், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தினர். காசியில் உள்ள அகோரிகளில், 5,000 பேர் நாடு முழுக்க ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளனர். அவ்வகையில், கொங்கு மண்டலத்தில், பிரசித்தி பெற்ற சிவாலயமான, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று (நவம்., 24ல்)வழிபாடு நடத்தினர்.

கோவிலில் வழிபாடு நடத்திய அவர்கள், பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். குஜராத்தை சொந்த ஊராக கொண்ட இவர்கள், அவிநாசியை தொடர்ந்து, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டு, பின், காசியை சென்றடைவர்.அகோரிகள் கூறுகை யில், ’தமிழகத்தில் உள்ள கோவில்கள் சிறப்பான முறையில் உள்ளன; மனதில் சுத்தம் இருந்தால், அனைத்தும் நலமாக இருக்கும்; மனது நல்லெண்ணம் இல்லாவிட்டால், நல்லதே நடக்காது,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !