ப.வேலூர் சதானந்த சித்தர் கோவிலில் குரு பூஜை
ADDED :2248 days ago
ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் உள்ள சக்கரப்பட்டி சித்தர் (எ) சதானந்த சித்தர் கோவிலில் குரு பூஜா விழா நேற்று நடந்தது. பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள சக்கரப்பட்டி சித்தர் (எ) சதானந்த சித்தர் கோவிலில், ஏழாவது ஆண்டு குரு பூஜா விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று (நவம்., 24ல்) காலை, 6:30 மணியளவில் யாகவேள்வி, மதியம் 12:00 மணிக்கு சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.