உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி அருகே ஐயப்ப சுவாமி கோவிலில் முதலாமாண்டு யாக பூஜை

தர்மபுரி அருகே ஐயப்ப சுவாமி கோவிலில் முதலாமாண்டு யாக பூஜை

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, எட்டிமரத்துப்பட்டியில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலின், முதலா மாண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜை நடந்தது.

தர்மபுரி அடுத்த எட்டிமரத்துப் பட்டியில், தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் முதலாமாண்டு விழா, நேற்று (நவம்., 25ல்) நடந்தது.

இதை முன்னிட்டு, நேற்று (நவம்., 25ல்) காலை, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. காலை, 11:00 மணிக்கு, ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக் கப்பட்டது. பூஜையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டனர். தொடர்ந்து, ஐயப்ப பஜனை பாடல்கள் பாடினர். இதில், அப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !