உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்பட்டு விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம்

செங்கல்பட்டு விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டில், சக்தி விநாயகர் கோவிலில், நேற்று, 1,008 சங்காபிஷேக விழா நடைபெற்றது. செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில், சப் - கலெக்டர் அலுவலகம் அருகில், சக்தி விநாயகர் கோவில் உள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவதற்காக, 1,008 சங்காபிஷேகம், சிறப்பு யாகம் மற்றும் விநாயருக்கு சிறப்பு அபிஷேகம், நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !