திட்டக்குடி ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்
ADDED :2166 days ago
திட்டக்குடி : சபரிமலை பக்தர்கள் தொண்டிற்கு திட்டக்குடி, ராமநத்தம் பகுதியைச் சேர்ந்த 53 ஐயப்ப பக்தர்கள் ராமநத்தத்திலிருந்து புறப்பட்டனர்.
கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், சபரிமலை தொண்டுக்காக திட்டக்குடி, ராமநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 53 பக்தர்கள் புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.இதையொட்டி ராமநத்தம் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அகில பாரத ஜப்ப சேவா சங்க கடலுார் மாவட்ட தலைவர் யாகமூர்த்தி, மாவட்டசெயலர் சாமிநாதன், துணைத் தலைவர் திட்டக்குடி தங்கராசு ஆகியோர் சபரிமலை செல்வோரை வழியனுப்பி வைத்தனர்.தொண்டரணி படை கண்காணிப்பாளர் சரவணன், தங்கதுரை, சீனுவாசன் ஆகியோருடன் திட்டக்குடி தாலுகாவைச்சேர்ந்த 53 பேர் சபரிமலை புறப்பட்டு சென்றனர்.