உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் கட்ட ரூ. 15 கோடி ஆஸி. அரசு அறிவிப்பு

கோவில் கட்ட ரூ. 15 கோடி ஆஸி. அரசு அறிவிப்பு

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வசிக்கும்  இந்தியர்கள் தங்கள் வழிபாட்டு தலங்களை சீரமைக்கவும் புதிய  கலாசார மையங்கள் கட்டவும் அந்நாட்டு அரசு 15 கோடி ரூபாய் நிதி உதவி  அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் விக்டோரியா மாகாணம்  உள்ளது. இங்கு 2 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள்  வசிக்கின்றனர்.

எனவே இங்கு வசிக்கும் இந்தியர்கள் கோவில்கள் உட்பட தங்கள்  வழிபாட்டு தலங்களை சீரமைக்கவும் கலாசார மையங்களுக்கான புதிய  கட்டடங்கள் மற்றும் அரங்குகள் கட்டவும் அந்நாட்டு அரசு 15 கோடி  ரூபாய் நிதி ஒதுக்குவதாக நேற்று அறிவித்தது.

இந்த தொகை விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த இந்திய தன்னார்வ  தொண்டு நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் மூலம் பணிகள்  நிறைவேற்றப்படும்.இந்த தகவலை ஆஸ்திரேலியாவின் பன்முக கலாசார விவகாரத்துறை  அமைச்சர் ரிச்சர்ட் வைன் நேற்று (நவம்., 26ல்) வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !