திருப்பதி தரிசனம்: பக்தர்களுக்கு அழைப்பு
ADDED :2163 days ago
ஈரோடு: திருப்பதியில் மார்ச் மாதம் நடக்கும் பல்வேறு சேவாக்கள் மூலம் சுவாமி தரிசனம் செய்ய, ஈரோட்டில் முன்பதிவு டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. திருப்பதியில் சுவாமிக்கு தினமும் அலங்கார பூஜைகள் செய்யப்படுகின்றன. வரும் மார்ச்சில் நடைபெறும் கல்யாண சேவா, விசஷே பூஜை, ஊஞ்சல் சேவா, ஆர்ஜித சேவா, வசந்தோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவா ஆகியவற்றுக்கு, வரும், 6 முதல் முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது. ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஸ்ரீவாரி சேவா டிரஸ்ட் அலுவலகத்தில் முன்பதிவு டிக்கெட்களை பக்தர்கள் பெற்று கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.