சாய்பாபா ஜெயந்தி விழா
ADDED :2246 days ago
மானாமதுரை: மானாமதுரை ஆதனுார் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில், சாய்பாபா ஜெயந்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா நடந்தது. சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பஜனை செய்தனர். அன்னதானம் வழங்கினர். டிரஸ்டி ராஜேஸ்வரி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.